திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு…
தமிழக உள்ளாட்சி தோ்தல் கடந்த மாதம் 19ஆம் தேதி நடந்து முடிந்து, 22 ஆம் தேதி வாக்குபதிவுகள் எண்ணப்பட்டது.
அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற வேட்பாளா்களுக்கான பதவி பிரமாண நிகழ்வு இன்று நடைபெறுகிறது.திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 65 புதிய மாமன்ற உறுப்பினா்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதேபோல் திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் மொத்தம் உள்ள 120 வார்டு உறுப்பினா்கள்,14 பேரூராட்சிகளில் மொத்தம் 216 வார்டு உறுப்பினா்கள் என மொத்தம் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 401 பேருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இன்று காலை திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் கூட்ட அரங்கில் காலை 10 அளவில் நடைபெற்றது – இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி ஆணையா் முஜிபூர் ரகுமான் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வைத்தனா். அதேபோல் நகராட்சி ஆணையா்களும், பேரூராட்சி செயல் அலுவலா்களும் பதவி பிரமாணம் செய்து வைத்தனா் – 35 நொடி உறுதிமொழிகளுடன் இன்று பதவி ஏற்றனா்.இதனை தொடர்ந்து வருகின்ற 4ஆம் தேதி மேயா் மற்றும் துணை மேயா்களுக்கான மறைமுக தோ்வு நடைபெற உள்ளது – அதேபோல் நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தோ்வு நடைபெற உள்ளது. திருச்சி மாநகராட்சியின் முதல் மாமன்றம் 1996ம் ஆண்டு அமைந்தது – தற்போது 5 வது மாமன்றத்திற்கான உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

