உடல் உறுப்புகளை தானம் செய்தவர் உடலுக்கு திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா அஞ்சலி!

0 428
Stalin trichy visit

புதுக்கோட்டை விராலிமலையை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவர் கடந்த 1ம் தேதி புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை நோக்கி ஆட்டோவில் சென்றபோது, திடீரென விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அந்த வாலிபரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார்

மருத்துவமனைக்கு அனுமதித்தனர். பின்னர் அவர் கடந்த 6ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அந்தவாலிபரின் உடல் உறுப்புகளைதானம் வழங்க குடும்பத்தினர் முன்வந்ததை அடுத்து இளைஞரின் உடல் உறுப்புகள் திருச்சி அரசு மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டது. அவரின் உடலுக்கு திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.