மெச்சதகுந்த திருச்சி மாநகர காவல்துறை : ம.நீ.மய்யம் பாராட்டு
மக்கள் நீதிமய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் கிஷோர்குமார் தெரிவித்திருப்பதாவது,
காவிரி மேம்பாலம் மூடப்பட்டதை தொடர்ந்து காவிரி மேம்பாலம் இருந்தாலும் பிரச்சினை, இல்லாம போனாலும் பிரச்சினை என கடந்த மூன்று நாட்களாக திருச்சியின் மக்களின் பிரதான செய்தியாக மாறியது காவிரி மேம்பால போக்குவரத்து விவகாரம்.
இதனை தொடர்ந்து பத்திரிக்கைகள் தொடர்ந்து இவ்விவகாரத்தை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். மக்கள் நீதி மய்யமும் எங்களது பணிகளை உணர்ந்து தொடர் அழுத்தம் கொடுத்தோம். ஆனால் கும்பகர்ண தூக்கத்திலிருந்த நெடுஞ்சாலைத்துறையோ எதுவாக இருந்தாலும் மூன்று நாள் கழித்து பீட்பேக் பார்த்த பிறகு தான் நடவடிக்கை என கையை விரித்துவிட்டது.
ஆனால் திருச்சி மாநகர காவல்துறை காவிரி மேம்பாலம் தொடர்பாக தொடர் ஆலோசனைக்கு பிறகு மய்யத்தின் கோரிக்கையும் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையுமான திருச்சி To ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம்To திருச்சி ஆகிய இரு வழிதடத்தடங்களிலும் தடுப்புகளை அமைத்து இருசக்கர வாகனங்கள் செல்ல சீரான போக்குவரத்திற்கு ஏற்ற தனி தனி வழிதடத்தை தற்பொழுது ஏற்படுத்தியுள்ளது பாராட்டுக்குறியது. பொதுமக்கள் படும் இன்னல்களுக்கு உடனடியாக செவிசாய்த்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கும் சிறப்பாக பணியாற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையூம் தெரிவித்துகொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.