திருச்சி சோமரசம்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு கத்தி குத்து!
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அடுத்த சுண்ணாம்பு காரணம் பட்டியில் இருசக்கர வாகனத்தை ஒருவர் தீயிட்டு கொளுத்துவதாக சோமரசம்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் சோமரசம்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜூனியர் சாந்த குமார் என்பவர் மது போதையில் வாகனத்தை கொளுத்த முயன்ற போது போலீசார் அவரை விரட்டியுள்ளனர். அப்போது போதை ஆசாமி சாந்தகுமார் காவல் ஆய்வாளர் கார்த்திகை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காவல் ஆய்வாளர் காயமடைந்தார்.
மேலும் அருகில் இருந்த பொதுமக்கள் போதை ஆசாமியை தாக்கியதில் அவரும் காயமடைந்த நிலையில் இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் ஆய்வாளர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.