திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க கழக கூட்டம்
திருச்சி, ஜுன் 3 திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் தி.மு.க. கூட்டம் நேற்று நடைபெற்றது. அவைத்தலைவர் கோவிந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார் இக்கூட்டத்தில் முத்தமிழறிஞர் தமிழின தலைவர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் அவரது புகழுக்கு மென்மேலும் மாண்பு சேர்க்கும் வகையில் சிறப்பாக கொண்டாடுவது , மற்றும் கழக ஆக்கப் பணிகளை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு தலைமை வகித்து தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யா மொழி பேசுகையில், நாம் அனைவரும் இன்றை தினம் சமுதாயத்தில் நமக்கு ஒரு உயர்வும் மரியாதையும் கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு முத்தமிழ் முத்தமிழறிஞர் கலைஞரே காரணம். கலைஞர் படிப்பகங்களில் நூலகம் அமைக்க வேண்டும், ஊர்கள் தோறும் புதிய கொடிக்கம்பங்கள் அமைத்து கொடியேற்ற வேண்டும். விலையில்லா பொருட்களை வழங்கும் ஆணையை பிறப்பித்தவர் கலைஞர். அரசின் எந்த திட்டங்களாக இருந்தாலும் தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்டது. கலைஞர் கோட்டத்தில் நமது மாவட்டத்தின் மாவட்ட கழக கூட்டத்தை ஒரு முறையாவது நடத்த வேண்டும் என்பது எனது ஆசை. வரும் 5ஆம் தேதி திருச்சிக்கு வருகை தரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக உற்சாக வரவேற்பு அளிப்பது எனவும் மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் கலைஞரின் திருவுருவச் சிலையை நிறுவ வேண்டும். 70 வயதை தாண்டியவர்களுக்கு பொற்கிழி வழங்கப்படும். திருச்சி தெற்கு மாவட்டத்தின் எல்லைகளான மூன்று பகுதிகளில் 100 அடி உயர கொடிமரத்தில் பொதுச்செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர் ஆகியோரை வைத்து கொடி ஏற்றப்படும் என்று அமைச்சர் கூறினார். இக் கூட்டத்தில் ஒரிசாவில் நடைபெற்ற ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், வண்ணை அரங்கநாதன், சபியுல்லா, கவிஞர் சல்மா, துணைமேயர் திவ்யா, மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு , குணசேகரன், பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மண்டல தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய, பேரூராட்சி பெருந்தலைவர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைவரும் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.