தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

0 397
Stalin trichy visit

.

தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பும் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மினி மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் சூர்யா சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார், மாநிலத் தலைவர் முனியாண்டி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரணி ராஜா முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளர்கள் நவகிராம சிற்பி குத்தப்பாக்கம் இளங்கோ சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் முக்கிய கோரிக்கையிலான தமிழக முதல்வர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து மனு அளிப்பது,ஊராட்சி மன்ற அனைத்து கணக்குகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவது,ஊராட்சி மன்ற செயலாளருக்கு வங்கி கணக்குகளில் மூன்றாவது கையொப்பம் இடுவது மற்றும் ரகசிய குறியீடு செயலருடைய கைப்பேசிக்கு அரசு வழங்க முடிவை கைவிடக் கோரியும், எங்களது கோரிக்கை இந்த அரசு ஏற்காவிடில் அனைத்து மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களை ஒருங்கிணைத்து கோட்டை நோக்கி பேரணி நடத்துவது போன்ற தீர்மானங்கள் ஒருமனதாகத் ஏற்றப்பட்டது.200 மேற்பட்ட அனைத்து மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.