திருச்சி எஸ்.பி. தலைமையில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
திருச்சி, ஆக.12 திருச்சி மாவட்டத்தில் “போதை பொருள் ஒழிப்பு ” தினத்தையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு
திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருச்சிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வ நாகரெத்தினம், தலைமையில் “ போதை பொருள் ஒழிப்பு ”தினத்தை முன்னிட்டு போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும், போதை பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் உறுதி மொழி ஏற்றனர். மேலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் காவல் துறையினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதி மொழி ஏற்றுள்ளனர்.