பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

0 224
Stalin trichy visit

திருச்சி, ஆக.12  திருச்சி மாவட்டடம்,  திருவெறும்பூர் அருகே பொய்க்கைகுடி ஏரிக்கரை அருகே சிலர் பணம் வைத்து  சூதாட்டம் விளையாடுவதாக துவாக்குடி காவல் உதவி ஆய்வாளர் நாகராஜனிற்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவரது தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு  சீட்டு விளையாடிக் கொண்டிருந்த காந்தர்வக்கோட்டை நடுத் தெருவைச் சேர்ந்த ஜெய்சங்கர் (42), புதுக்கோட்டை மாவட்டம் சவேரியார்ப்பட்டினம் வீராசாமி (48), பூதக்குடி சீனிவாசன் (50), பாளையப்பட்டி பிரகாஷ் (33), திருச்சி வரகனேரி நித்யானந்தபுரம் ஜவஹர் ஸ்ரீநாத் (27) ஆகிய 5 பேரையும்போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 52 சீட்டுக்களையும், ரூ. 20 ஆயிரம் ரொக்கம், 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.