ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி திருச்சி மாணவிகள் தொடர்ந்து போராட்டம்!

0 508
Stalin trichy visit

ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி முன்பாக ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பு படித்து வரும் மாணவ மாணவிகள் செப்டம்பர் 3-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்றும் கல்லூரி முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தொடக்கக்கல்வி பட்டய தேர்வு நேற்று முதல் துவங்கியது.இந்த தேர்வை தமிழகம் முழுக்க 7 ஆயிரம் முதல் 12000 மாணவர்கள் எழுதுகின்றனர்.

இந்த நேரடி தேர்வில் விடைத்தாள் திருத்தும் நடைமுறையில் குளறுபடிகள் இருப்பதாகவும், கொரோனா காலத்தில் நேரடி வகுப்புகள் தொடங்கி கால அவகாசம் வழங்கி தேர்வை ஆன்லைனில் நடத்த வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் கல்லூரி வாசலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy

Leave A Reply

Your email address will not be published.