முசிறியில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி!

0 331
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், முசிறி பழைய பஸ் நிலையம் அருகே தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி அருகிலேயே ஏடிஎம் மையம் உள்ளது. இந்த நிலையில் நள்ளிரவு 3 பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் உள்ளே நுழைந்து இரும்பு கம்பியால் ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். சிறிது நேரத்திலேயே அங்கு பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலி எழுப்ப ஆரம்பித்ததால், பயந்துபோன

கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த முசிறி டிஎஸ்பி அருள்மணி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார், எஸ்ஐ முத்தையன் ஆகியோர் ஏடிஎம் மையத்திற்கு சென்று அங்கு பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையடிக்க முயற்சித்த நபர்கள் குறித்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.