6 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் விற்பனை செய்த 2 பேர் கைது!

0 660
Stalin trichy visit

திருச்சியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் தயாளன் மற்றும் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் மலைக்கோட்டை நடுவீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அங்குள்ள ஒரு பீடா கடையில் கிருஷ்ணன் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் பீடா கடைகளில் இருந்த 6 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல அதே வீதியில் உள்ள மளிகை கடையில் ஆகாஷ் என்பவரிடம் ஒரு கிலோ புகையிலை பொருள்களையும் போலீசார் பறிமுதல் செய்து ஆகாஷையும் கைது செய்தனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.