பெண்ணிடம் நகையைப் பறித்த இருவர் கைது

0 222
Stalin trichy visit

திருச்சி ஏப்ரல் 4 திருச்சி- திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி.
இவர் கடந்த மார்ச் 11ம் தேதி திருவானைக்காவல் மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது ஒரு கும்பல் காரில் வந்து அவரது அருகில்  இறங்கினர். பின்னர் அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுத்து, நூதன முறையில் அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னையைச் சேர்ந்த சதீஷ் ரமேஷ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.