கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
திருச்சி ஏப் 4 உறையூரில் சாலை பிள்ளையார் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு. திருச்சி உறையூர் சாலை ரோட்டில் சாலைப் பிள்ளையார் கோவில் உள்ளது. நிலையில் நேற்று இரவு கோவில் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் இன்று காலை கோவிலை திறக்க வந்த பொழுது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்ட அதிலிருந்து உண்டியலில் உடைக்கப்பட்ட இருப்பது தெரியவந்தது.இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம ஆசாமி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.