பள்ளி படிப்பு முடித்து கல்லூரி செல்பவரா நீங்கள்? வணிகவியல் துறையில் சாதிக்க வேண்டுமா? இதோ 100% வேலைவாய்ப்புடன் திருச்சியில் களமிறங்குகிறது புதிய இரண்டு பட்டப்படிப்புகள்!

0 1,051
Stalin trichy visit

பள்ளிப்படிப்பை முடித்த ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். அடுத்து என்ன படிக்கலாம்? எப்போது படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? எங்கு படிக்கலாம் ? என்ற சிந்தனைகள் தோன்றும். உங்கள் கனவுகள் அனைத்தையும் மெய்ப்பிக்கும் வகையில் இந்தியாவிலேயே 2வது கல்லூரியாக, தமிழகத்தில் முதல்முறையாக வணிகம் சார்ந்த பட்டப்படிப்புகளை திருச்சி தேசியக் கல்லூரியில் இந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே 1919ம் ஆண்டு அப்போதைய சிராப்பள்ளி சுற்றுவட்டார மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கல்லூரி. இந்தியாவின் குடியரசு தலைவர், இன்றைய நீயா நானா கோபிநாத் உள்பட பல பிரபலங்களையும், அம்மன் டி.ஆர்.ஒய் சோமசுந்தரம் உட்பட பல தொழில் அதிபர்களையும் உருவாக்கிய ஒரு கல்லூரி என்றால் அது நம்முடைய திருச்சி தேசிய கல்லூரி தான்.

நூற்றாண்டுகளைக் கடந்து இன்றளவும் பல மாணவர்களின் கனவுகளை மெய்ப்பிக்கும் வகையில் கல்விப் பணியில் தொடர்ந்து சேவை செய்துவரும் இக்கல்லூரியில் அதுவும் பழமைமிக்க ஒரு துறையான வணிகவியல் துறையில் ஒரு மாற்றத்தை முன்னோக்கி, நம்ம ஊரு மாணவர்களும் உலக அளவில் சிறகடித்து பறக்க வேண்டுமென இப்படிப்பினை திருச்சி தேசியக் கல்லூரியில் முற்றிலும் மாணவர்களின் நலன் நோக்கி கொண்டு வந்துள்ளது.

இதில் முதல் பட்டப்படிப்பாக B.COM (BPS), 2வது BMS (AGRI STORAGE & SUPPLY CHAIN) ஆகிய இரண்டு வணிகவியல் சார்ந்த படிப்புகளும், இதில் BMS முதல்முறையாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஆதரவோடு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி தேசியக் கல்லூரியில் அறிமுகமாகிறது. தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக இந்த BMS படிப்பை திருச்சியில் முதல் கல்லூரியாகவும், 100 சதவீத வேலை வாய்ப்புடன் கொண்டு வருகிறார்கள் என்று கூறியது வியப்பாகத்தான் இருந்தது. இது குறித்து கூடுதல் தகவல்களுக்காக வணிகவியல் துறையின் தலைவர் பேராசிரியர் Dr.K.குமாரை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறிய கருத்துக்கள் இன்னும் ஆச்சரியமடைய செய்தன…

“இன்றைய நவீன காலத்தில் வணிகத்திற்கு எப்போதுமே மதிப்பு கூடிக்கொண்டே தான் போகும். ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் தீர்மானிப்பது வணிகம் தான். டெல்டா மாவட்டத்தில் முதல்முறையாக எங்கள் கல்லூரியில் இந்த பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்துகிறோம். நிச்சயமாக இந்த இரண்டு படிப்புகளைப் படித்தால் 100 சதவீத வேலை வாய்ப்பிற்கு உறுதி கூறுகிறோம். மற்ற படிப்புகள் படிக்கும் போது இடையில் மாணவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக நின்றுவிட்டால் அந்த படிப்பு முழுவதும் வீணாகிவிடும்.ஆனால் இந்த BMS படிப்புகளை படிக்கும் போது ஒரு வருடம் முடித்தாலே அதற்கான டிப்ளமோ சான்றிதழ் தருகிறார்கள், அதனைத் தொடர்ந்து 2வது வருடம் பயிற்சிகள் அளிக்கப்பட்டு மூன்றாவது வருடம் முழுவதுமாக அப்ரண்டிஸ் பயிற்சி தான்.

மூன்றாவது வருடம் முழுவதும் தொழிற்சாலைகள் மற்றும் பெரிய பெரிய நிறுவனங்களில் மாணவர்கள் முழுவதும் அங்கு இருந்து தான் தங்களுடைய படிப்பை மேற்கொள்வார்கள். இதற்கு அவர்களுக்கு மாதம் 7 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகையாக அரசே வழங்குகிறது. ஒருபுறம் மாணவரின் படிப்பும், மறுபுறம் வருவாய் ஈட்டும் அளவிற்கு இந்த படிப்புகளை தற்போது நம்முடைய திருச்சியில் டெல்டா மாவட்ட மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளோம். நான்காம் ஆண்டு தொடக்கத்தில் அனைத்து மாணவருக்கும் வேலைவாய்ப்பு என்பது உறுதியான ஒன்றாகி உள்ளது”. என்றார்

இந்த படிப்பு படித்தால் எந்த மாதிரியான வேலைக்கு செல்லலாம் என்ற கேள்விக்கு… “நிச்சயமாக உலகம் முழுவதிலும் உள்ள தொழில் நிறுவனங்கள் குறிப்பாக இந்தியாவில் உள்ள இண்டஸ்ட்ரீஸ், வேர்ஹவுஸ், பிசினஸ் மேனேஜர், கஸ்டமர் சர்வீஸ் மேனேஜர், சப்ளை செயின் மேனேஜர், எக்ஸ்சேஞ்ச் ஆபிஸர் உள்ளிட்ட வணிக ரீதியான அத்தனை வேலைகளுக்கும் தாராளமாக செல்லலாம்” என்றார். இதற்கு பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் படித்த அனைவருமே தாராளமாக விண்ணப்பித்து வாழ்வில் செம்மை அடையலாம்.
தற்போது இருக்கும் காலகட்டத்தில் மாணவர்கள் ஏனோதானோ என்று படிக்காமல் ஏதாவது ஒன்றை எடுத்து தெளிவாகப் படித்தால் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதே நிதர்சனம். மேலும் இந்த படிப்புகள் குறித்த கூடுதல் தகவலுக்கு 94435 48859, 97155 99155 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

Leave A Reply

Your email address will not be published.