இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தியவர் கைது
திருச்சி, மே 13 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்ணீர்பந்தலில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மோட்டார் பைக்கில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர் மோட்டார் பைக்,4 சாக்கு முட்டை மணல் பறிமுதல்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்ணீர்பந்தல் கொள்ளிடம் ஆற்று பகுதியில் லால்குடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் பைக்கில் சாக்கு மூட்டைகளில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் லால்குடி அருகே கூகூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் (43) என தெரியவந்தது.பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கடத்திவரப்பட்ட 4 மூட்டை மணல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் பைக்கை பறிமுதல் செய்தனர்.