மணப்பாறையில் இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது : 29 வாகனங்கள் பறிமுதல்

0 530
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரில் காய்கறி மார்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய திடீர் வாகன சோதனையில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த நபரிடம் விசாரணை நடத்திய போது முன்னுப் பின் முரணாக பதில் கூறியதால் போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த போது கரூர் மாவட்டம், பாலவிடுதி அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்த ஜெயபால் வயது 29 என்பது தெரியவந்தது. மேலும் மணப்பாறை பகுதியில் பல்வேறு இடங்களில் 20 ஸ்ப்லெண்டர் பைக்குளை மட்டும் குறி வைத்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து 20 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.