திருச்சி தென்னூரில் உள்ள உக்கிரமாகாளி அம்மன் கோவிலில் வருடாந்திர தேர்த்திருவிழா வருகிற 5ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அன்று இரவு காளியாவட்டம் நிகழ்ச்சியும், மறுநாள் சுத்த பூஜை, அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. 7ம் தேதி குட்டிக்குடிக்கும் நிகழ்ச்சி மற்றும் திருத்
தேர் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி தென்னூர் பிடாரி மந்தையில் எல்லைக்காவல் தெய்வமான சந்தன கருப்பு சாமி குட்டிக்குடிக்கும் நிகழ்ச்சியும், அருள்வாக்கும் நடைபெறும். தொடர்ந்து அம்மன் வீதிஉலா நடக்கிறது. 8ம் தேதி மஞ்சள் நீராடல், அம்மன் வீதி உலாவும், 9ம் தேதி அதிகாலை சுவாமி கோவிலுக்கு குடிபுகுதலும், 10ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது.