சுகாதார நிலையத்தில் புகுந்து வாலிபரை வெட்டிய வழக்கில் சிறுவன் உள்பட 5 பேர் சரண்
திருச்சி, ஜூலை 15 சுகாதார நிலையத்தில் புகுந்து வாலிபரை வெட்டிய வழக்கில் சிறுவன் உள்பட 5 பேர் சரண் மற்றொரு தரப்பில் 4 பேர் கைது
திருச்சி, குழுமணியில் செயல்பட்டுவரும் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்குள் புகுந்து மேக்குடி பகுதியைச் சேர்ந்த வாலிபரான சந்தோஷ் என்ப வரை, 17 வயது சிறுவன் உள் ளிட்ட 4 பேர் வெட்டினர்.
இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர். இந்த சம்பவத் தில் சிறுவன் மற்றும் குழுமணி வீரத்தாய் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜீவா (20), அதே பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான சஞ்சய், மோகன் (26), கோப்பு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (19) ஆகியோர் சரணடைந்தனர். இதில் 17 வயது சிறுவன் தஞ்சை யில் உள்ள சிறுவர்கள் சீர்திருத் தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மற்ற 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல் சிறுவனின் தந்தை சுக்கான்குழி பகுதியை சேர்ந்த வடிவேலை தாக்கியதாக கரூர் மாவட்டம் நங்கவரம் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (25), சரித்திர கொடி பதிவேடு குற்றவாளியான யாலம் மேல சுப்பராயன்பட்டியை சேர்ந்த பூபதி (24), அதே பகுதி யைச் சேர்ந்த விஷால் (20), குளித் தலை அருகே உள்ள முதலைப் பட்டியை சேர்ந்த தஸ்வின் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்