அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி!

0 415
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஊட்டத்தூர் அம்மன் காலனியைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகன் 24 வயதான சிவக்குமார். இவர் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் ஊட்டத்தூரில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பிகே அகரத்தில் எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இரு

சக்கர வாகனம் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான சிவகுமார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.