மஸ்தூர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பயனை உடனே வழங்க வலியுறுத்தல்!
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். இதில் மின்வாரியம் பொதுத்து றையாகவே தொடர வேண்டும்.
அரசின் உத்தரவாதத்துடன் தடையின்றி தற்போதைய வடிவத்திலேயே ஓய்வூதியம் வழங்க வேண்டும். மஸ்தூர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பயனை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை எளிமைப்படுத்தி காசில்லா சிகிச்சை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். விதவை, விவாகரத்து பெற்றவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த குடும்ப ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
இதில் சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில தலைவர் பஷீர், வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் வட்ட இணைச் செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.