திருநெடுங்களநாதர் கோயிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை…..

0 318
Stalin trichy visit

திருச்சி துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோயிலில் வைகாசிவிசாக சிறப்பு அபிஷேகம்…
திருவெறும்பூர் அடுத்து உள்ளது துவாக்குடி அதன் அருகேயுள்ள நெடுங்களநாதர் திருக்கோயில் இடர்களை களையும் பதிகம் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த சிவத்தலமாகும் இங்கு இறைவன் நித்திய சுந்தரேஸ்வரராகவும் இறைவி மங்களாம்பிகையாகவும் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர் உலகப் புகழ்பெற்ற திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் நெடுங்களநாதர் மங்களாம்பிகை,சோமஸ்கந்தர் ஆகியோருக்கு நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு 11 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் வெற்றிவேல் தலைமையில் சிவாச்சாரியார்கள் சோமசுந்தரம்,ரவி, ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.