போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வயலூர் சாலை : மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

0 159
voc

திருச்சி புத்தூர் நால்ரோட்டில் இருந்து வயலூர் செல்லும் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகனயொட்டிகள் தினம்தோறும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நகர மயமாக்கல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக திருச்சியின் புறநகர் பகுதிகள் குடியிருப்பு பகுதிகளாக மாறிவருகின்றன. குறிப்பாக சோமரம்பேட்டை, அதவத்தூர், வயலூர் போன்ற பகுதிகள் விளைநிலங்கள் பிளாட்டுகளாக, அப்பாரர்ட்மெண்ட்டுகளாக மாறி வருகின்றன. மேலும் கல்வி நிறுவனங்களும் உருவாகி வருகின்றன. இதன் காரணமாக வயலூர் சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. ஆனால் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப அந்த சாலை அகலப்படுத்தாமல் மிகவும் குறுகலாக இருக்கிறது.
மேலும் அச்சாலையில் பிஷப் கல்லூரி; இருப்பதால் புதிது புதிதாக் கடைகள் உருவாகி உள்ளன. குறிப்பாக அப்பகுதியிலுள்ள ஓட்டல், ஐஸ்கிரீம் கடை, பிரியாணிகடை, காபி ஷாப், ஸ்வீட் கடை, பழமுதிர் சோலை,தள்ளுவண்டி கடைகள் , காய்கறி வியாபாரம் செய்வோர் என அந்த சாலையை ஆக்கிரமித்துள்ளனர். மேலும் அந்த கடைக்கு செல்வோர் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்துவிட்டு செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படுகின்றன.
பெரும்பாலான சாலைகளில் பீக் அவர்ஸ் எனப்படும் காலை, மாலை நேரங்களில் மட்டும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும் ஆனால் வயலூர் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம்; அந்த சாலையிலுள்ள பெரும்பாலான கடைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். கடைகள் முன் நிறுத்தப்படும் வாகனங்கள்.


எனவே வயலூர் சாலையில் குறிப்பாக பிஷப் கல்லூரியிலிருந்து உய்யக்கொண்டான் திருமலை வரை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், சாலையில் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க போக்குவரத்துக் காவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகனயொட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
நடவடிக்கை எடுக்குமா? மாநகராட்சி நிர்வாகம், போக்குவரத்து காவல்துறை

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!