உக்ரைனில் தவிக்கும் திருவெறும்பூர் மாணவரின் உருக்கமான வீடியோ வைரல்!
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் வேணுகோபால் நகரைச் சேர்ந்தவர் கிப்சன் ஜோசப் செல்வராஜ். இவர் உக்ரைனில் உள்ள கீவ் நகரில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படித்து வருகிறார். போர் நடந்து வரும் சூழலில், உக்ரைன் எல்லைக்கு வருவதற்காக சுமார் ஆறு கிலோ மீட்டர் தண்டவாளத்தில் நடந்து கொண்டதாகவும்,
வீடியோவை பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்….
தற்போது மெட்ரோ ஸ்டேஷனில் பதுங்கி உள்ளதாகவும், இங்கு உணவு தண்ணீர் என்று தவித்து வருகிறோம் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருவதாகவும் மாணவர் அவருடைய வீடியோ பதிவுவில் தெரிவிக்கின்றார். மேலும் ரயிலில் வருவதற்கு முயன்றால் உக்ரைனை சேர்ந்தவர்கள் இந்தியர்களை ரயிலில் ஏற விடாமல் தடுப்பதாகவும் கவலை தெரிவிக்கிறார்.