கண்ணுடையான்பட்டியில் கிராமசபைக் கூட்டம்; அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு!
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்புப் பார்வையாளராக பங்கேற்று மக்களிடம் கலந்துரையாடி பேசினார். இந்நிகழ்வில்

மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வே.பிச்சை, உதவி இயக்குனர் எஸ்.கங்காதாரிணி, ஊராட்சித் தலைவர் மு.தங்கமணி, ஒன்றியக் குழுத்தலைவர் அமிர்தவள்ளி இராமசாமி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.