வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
திருச்சி, ஜன.28 தேசிய வாக்காளர் தினம் கடந்த 25- ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நேற்று மாலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்லூரி மாணவ -மாணவிகளின் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை வழியாக சென்று நீதிமன்றம் அருகே நிறைவடைந்தது. இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வைத்தியநாதன், தேர்தல் தனி வட்டாட்சியர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.