முக்கொம்பு மேலணையில் நீர்வள ஆதாரத் துறை அதிகாரி ஆய்வு

0 574
Stalin trichy visit

முக்கொம்பு மேலணையில் காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளாகப் பிரிந்து செல்கிறது. தற்போது வடகிழக்குப் பருவமழையினாலும், மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீரை காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டதாலும், டெல்டா பாசனத்திற்கு நீர்த்தேவை இல்லாததாலும் முக்கொம்பு மேலணையின் பழைய கொள்ளிட கதவணையிலிருந்து வௌ்ள உபரி நீரானது கடந்த 8-ந் தேதி முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து நீர்வள ஆதாரத் துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி முக்கொம்பு மேலணைப் பகுதியில் காவேரி கதவணை, பழைய கொள்ளிட கதவணைகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்து வௌ்ள உபரி நீரை முறைப்படுத்தி வெளியேற்றுவதற்கும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கும் களப்பணியாளர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார். மேலும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தற்போது கட்டப்பட்டு வரும் புதிய கதவணைப் பணிகளையும் பார்வையிட்டு பணிகளை முடிப்பதற்கும், திடீரென அதிகப்படியான வெள்ளம் ஏற்பட்டால் கட்டுமானப் பொருட்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிட்டார்.

முன்னதாக திருச்சி மாவட்டத்தில் பரவலாகப் பெய்து வரும் மழையினைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின்; உத்தரவின்படி, எடமலைப்பட்டிபுதூர் கோரையாற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் வௌ்ளத்தடுப்பு நடவடிக்கைகள், டோபிகாலனி, காந்தி நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றும் பணிகள்,புத்தூர் உய்யக்கொண்டான் தொட்டிப்பாலம், குடமுருட்டி ஆறும் கொடிங்கால் வடிகாலும் சேரும் பகுதி, குடமுருட்டி ஆறு காவிரியாற்றில் சேரும் பகுதி ஆகியவற்றினைப் பார்வையிட்டு தேவையான வௌ்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கண்காணிப்புடன் பணியாற்றிடவும் களப்பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது, கண்காணிப்புப் பொறியாளர்கள், திருவேட்டைசெல்வம், சுப்ரமணியன், செயற்பொறியாளர்கள், மணிமோகன், சரவணன், கீதா, உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் மற்றும் உதவிப்பொறியாளர்கள், இளம்பொறியாளர்கள் உடனிருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.