வனச்சரகர் அதிரடியாக பணியிடை நீக்கம்
திருச்சி வனச்சரகராக பணியாற்றி வந்தவர் குணசேகரன். இவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் என்.சதீஷ் வனச்சரகர் குணசேகரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருச்சியில் வனச்சரகர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் வனத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.