அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் திருவெறும்பூர் பகுதி 39-வது வட்ட கழகத்தில்
தாகம் தீர்க்கும் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமை

தாங்கி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். அப்போது திருவெறும்பூர் பகுதி செயலாளர் S.பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், பகுதி, வட்டக் நிர்வாகிகள் மற்றும் கட்சி முன்னோடிகள் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை 39-வது வட்ட கழக செயலாளர் SR.ரவி செய்திருந்தார்.