வெண் பட்டு புழு வளர்ப்பு பயிற்சி முகாம்
தொட்டியம் அருகே வெண் பட்டு புழு வளர்ப்பு பயிற்சி முகாம்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டம் கீழ் உண்ணியூர் கிராமத்தில் வெண் பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு நடைபெற்றது .
பயிற்சிக்கு தொட்டியம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பா சிவக்குமார் தலைமை வகித்தார் . பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் ராமசாமி பட்டு வளர்ச்சி துறையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானிய விபரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறித்தும் விளக்கமளித்தார். பண்ணை பள்ளியின் முதல் வகுப்பில் மல்பெரி ரகங்கள், தரமான மல்பெரி இலை உற்பத்தி தொழில்நுட்பங்கள் மல்பெரி இலையினை தாக்கும் நோய்களும் அதனை கட்டுப்படுத்தும் முறைகளும் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் யுவராஜ் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் மானிய விபரங்கள் பற்றியும் கூறினார் . பட்டுப்புழு வளர்ப்பு முன்னோடி விவசாயி ராம்குமார் பட்டுப்புழு வளர்ப்பு குறித்து தன்னுடைய அனுபவங்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக அட்மா திட்டம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகுந்தா அனைவரையும் வரவேற்று அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் பற்றியும் பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்புமல்பெரி சாகுபடி தொழில்நுட்பம் முதல் பட்டு புழு வளர்ப்பு மற்றும் பட்டுக்கூடு உற்பத்தி சந்தைப்படுத்துதல் என ஆறு வகுப்புகளாக பிரித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. பண்ணைப் பள்ளி பயிற்சி வகுப்பில் உன்னியூர் கிராமத்தைச் சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சரண்யா மற்றும் கீர்த்தனா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.