கலைஞர் நினைவு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு

0 260
Stalin trichy visit

 

தொட்டியம் ஒன்றியத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தொட்டியம் தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பதக்கம் ,சான்றிதழ், நினைவு பரிசு மற்றும் ரொக்க பரிசு ஆகியவற்றை வழங்கி வாழ்த்தி பேசினார்.திமுக ஒன்றிய செயலாளர் திருஞானம் தங்கவேல் ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணவேணி துணைத்தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.கலைஞர் நினைவை போற்றும் விதமாக நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கடந்த ஒரு மாத காலமாக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் நினைவு பதக்கங்களையும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.முசிறி தொகுதியில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.நேற்று நடைபெற்ற நிகழ்வில் கொளக்குடி,
ஏலூர்பட்டி, நத்தம் , காட்டுப்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காட்டுப்புத்தூர் ஜமீன்தார் பள்ளிஆகியவற்றைச் சேர்ந்த 30 மாணவ மாணவிகள் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் பரிசுகளை பெற்றனர்.
விழாவில் பேரூராட்சி தலைவர்கள் தொட்டியம் சரண்யா பிரபு, காட்டு புத்தூர் சங்கீதா சுரேஷ், துணைத் தலைவர் சுதா சிவ செல்வராஜ், காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல்அமீது மற்றும் கட்சி நிர்வாகிகள் கிராம பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.