தீராத வயிற்றுவலியால் அரளி விதையை தின்று பெண் தற்கொலை!

0 384
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த சேந்த மாங்குடி குடித் தெருவைச் சேர்ந்த ராஜு மனைவி செல்வராணி (வயது 40). ராஜு 4 வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து தனது மகனுடன் வாழ்ந்து வந்த செல்வராணி நீண்ட நாட்களாக இருந்து வந்த தீராத வயிற்று வலியின் காரணமாக அரளி விதையை அரைத்து சாப்பிட்டதால்,

சிறிது நேரம் கழித்து வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் செல்வராணியை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி பெற்று, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து செல்வராணியின் மகன் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.