மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

0 305
Stalin trichy visit

திருச்சி வரகனேரி முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் முகமதுரபி. இவரது மனைவி நிலோ பர்(வயது 44). இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென

வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.