தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட பணிகள் : பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்
திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 19 லட்சத்தில் கீழ்காணும் பணிகள் தனது தொகுதி மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார் . ஆலத்தூர் சிவன் கோயில் அருகில் போர்வெல் மற்றும் சின்டெக்ஸ் டேங்க்
காட்டூர் வார்டு எண் 42 ஆலத்தூர் மயிலாயி அம்மன் கோயில் புதிய போர்வெல் திறப்பு
சின்ன சூரியூர் மாரியம்மன் கோயில் கான்கிரீட் சாலை சாலை
வார்டு என் 41 காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள போர்வலுடன் சின்டெக்ஸ்
வார்டு எண் 38 அண்ணாநகர் மாரியம்மன் கோயில் தெரு போர்வெலுடன் கூடிய சின்டெக்ஸ்
வடக்கு பிள்ளையார் கோவில் தெருவில் போர் வெல்லுடன்டன் கூடிய சின்டெக்ஸ் தொட்டி
இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா, கே என் சேகரன் மண்டல குழு தலைவர் மு. மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கே எஸ் எம் கருணாநிதி கங்காதரன் மாமன்ற உறுப்பினர் சிவக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்