ரெயில்வே கோட்டத்திற்கு வருவாய் ரூ.138 கோடியாக உயர்வு….
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொது போக்குவரத்து சேவை முற்றிலுமாக தடைபட்டது. இதனால் ரயில்வே துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ள காரணத்தினால் ரயில்வே வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி ரெயில்வே கோட்ட பொதுச் செயலாளர் மணி அகர்வால் கலந்து கொண்டு பேசும்போது, 2021 -22 ஆம் நிதியாண்டில் திருச்சி ெரயில்வே கோட்டத்துக்கு பயணிகள் மூலமாக கிடைக்கும் வருவாய் 150.64 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் பயணிகள் வாயிலாக ரூ.55.21 கோடி வருவாய் மட்டுமே கிடைத்தது. அதேவேளையில் 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.138 கோடியே 38 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும் சரக்கு கையாளுதல் மூலம் திருச்சி ரெயில்வே கோட்டம் ரூ.280.03 கோடி வருவாயைப் பெற்றுள்ளது. இதுவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 117 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 2021 ஏப்ரல் முதல் ஜூலை 2022 வரை 8.46 மில்லியன் மக்களை திருச்சியில் ரயில்வே கோட்டம் கையாண்டு இருக்கிறது. வரக்கூடிய ஆண்டுகளில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மூலம் வருவாய் மேலும் உயரம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.