குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தொடர்பான பயிலரங்கம்
திருச்சி, மார்ச் 23 திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலில் தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான மண்டல அளவிலான பயிலரங்கை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்வில் தொழிலாளர் நலகூடுதல் ஆணையர் ஜெயாலன், தொழிலக பாதுகாப்பு கூடுதல் இயக்குநர் சித்தார்த், இணை ஆணையர்கள் டாக்டர் திவ்யநாதன், கோவிந்தன், உதவி ஆணையர் வெங்கடேசன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.