சிறுகனூரில் யாதவா் எழுச்சி மாநாடு…

0 555
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் தமிழ்நாடு யாதவ மகாசபை சாா்பில் நடந்த இந்த மாநாட்டுக்கு டாக்டா் நாசே.ஜெ.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, மாநாட்டை தொடக்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினா்களாக அகில இந்திய யாதவ மகாசபை முன்னாள் தலைவரும் முன்னாள் எம்.பி. உதய பிரதாப் சிங், முன்னாள் மத்திய இணை அமைச்சா் அருண் சுபாஷ் சந்திர யாதவ், உத்தரபிரதேச மாநில எம்.பி ஷியாம் சிங் யாதவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரகண்ட் மாநில பொறுப்பாளா் தேவேந்தா் யாதவ், ஆந்திர மாநில எம்.பி. பீடா மஸ்தான் ராவ், அகில பாரத் வா்ஸயா யாதவ மகாசபை தலைவா் ஸ்வப்பன் குமாா் கோஷ், முன்னாள் எம்.பி. சுக்ராம் சிங் யாதவ், தெலங்கானா அரசின் அமைச்சா் தல சானி சீனிவாஸ் யாதவ், ஆந்திரா முன்னாள் அமைச்சா் அனில் குமாா் யாதவ், புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சா் லட்சுமி நாராயணன், புதுச்சேரி மாநில வேளாண்மை துறை அமைச்சா் தேனீ ஜெயக்குமாா், புதுச்சேரி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சிவா, அதிமுக முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா, தஞ்சாவூா் சட்டப்பேரவை உறுப்பினா் நீலமேகம் , மாநகராட்சி துணை மேயா்கள் மகேஷ் குமாா் (சென்னை), ராஜு(நெல்லை) உள்ளிட்டோா் பங்கேற்றனர். முன்னதாக, மாநில பொதுச் செயலாளா் வேலு மனோகரன் வரவேற்று பேசினார். மாநில பொருளாளா் எத்திராஜ் நன்றி கூறினார்.

இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன :-

சமூகநீதியினை செயல்படுத்துவதில் இந்தியாவின் முதல் மாநிலமாகத் திகழும் தமிழக அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பினை மேற்கொள்ளவேண்டும். மக்கள் தொகையின் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு சலுகைகள் மற்றும் முன்னுரிமை அளித்தல் வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்வதோடு, அதுவரை, யாதவா்களுக்கு 5% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்..

தமிழக யாதவா்களின் நீண்டகால கோரிக்கையான தமிழ்நாடு கால்நடை வளா்ப்போர் நல வாரியத்தை அமைத்து கால்நடை வளா்ப்போர்க்கு பாதுகாப்பும், பொருளாதார மறுமலா்ச்சியும் ஏற்பட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்வதோடு அதன் தலைவராக ஒரு யாதவரை நியமனம் செய்யுமாறு தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்தனர்.

தமிழக மக்கள் தொகையில் மூன்றாம் பெரும் நிலையிலுள்ள யாதவ சமுதாயத்தைச் சோ்ந்தவா்களுக்கு, தோ்வாணையக்குழு, நீதிபதிகள், துணைவேந்தர்கள், வாரியத்தலைவா்கள் போன்ற பதவிகளில் யாருமே இல்லாதது மிகவும் வருந்ததக்கது. ஆதலால், இ்ப்படியான பதவிகளில் யாதவா்களை நியமனம் செய்ய வேண்டும்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், தென்பாண்டி மண்டலத்தில் வெள்ளையா்களை நேருக்கு நேராக எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்த முதல் தமிழ் மண்ணின் மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு அவா் வாழ்ந்த மண்ணில் புதியதோர் கோட்டை அமைத்து அதை சுற்றுலா தளமாக அமைத்திடவும், பள்ளி பாடப்புத்தகங்களில் அவருடைய வரலாற்றை சோ்த்திடவும் வீரன் அழகுமுத்துக்கோன் வாரிசுகளுக்கு மானியம், இதர சலுகைகளும் வழங்கிட வேண்டும் .

இந்திய இராணுவத்தில் கூர்கா ரெஜிமெண்ட், ஜாட் ரெஜிமெண்ட் சீக் ரெஜிமெண்ட் என்று சிறப்பு பிரிவுகள் உள்ளது போல் மகாபாரத காலத்திலிருந்து யாதவா்கள் ஆற்றி உள்ள போர்படை இராணுவ சேவை கருத்தில் கொண்டு இந்திய இராணுவத்தில் யாதவா் ரெஜிமெண்ட் என்ற பெயாில் ஒரு புதிய பிரிவை ஏற்படுத்த வேண்டும்.

யாதவா்களின் தொன்மையான தொழில் கால்நடை வளா்ப்பு. அவா்களின் தொன்மையான வாழ்விடம் (முல்லை நிலம்) காடும் காடுசார்ந்த நிலம் என்பதால் வன உரிமை சட்டப்படி காடுகளில் பூர்வீகமான மேய்ச்சல் உரிமையை வழங்கிட வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.