சிறுமியை காதலிக்குமாறு புகைப்படம் எடுத்து மிரட்டி,பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது..

0 320
Stalin trichy visit

திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன்  திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்கொடுமை குற்றங்களை தடுக்கவும், வாகன தணிக்கை செய்து குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த 19.05.22-ந்தேதி கண்டோன்மெண்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை உறவினர்களுக்கு அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்தும், காதலிக்குமாறு வற்புறுத்தியதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி ஜஸ்டின் ஸ்டாலின் வயது 31. த.பெ. சார்லஸ் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் எதிரி ஜஸ்டின் ஸ்டாலின் என்பவர் தொடர்ந்து சைபர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் சிறுமிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும். பொருட்டு சம்மந்தப்பட்ட கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் (Cyber Law Offender) கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையிவை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் திருச்சி மாநகரில் இது போன்ற சிறுமிகள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.