அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளம் ரோபாட்டிக்ஸ் தொழில் முனைவோர் பயிற்சி

0 366
Stalin trichy visit

இளம் ரோபாட்டிக்ஸ் தொழில் முனைவோர் பயிற்சி தொடக்கம்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த அற்புத வாய்ப்பு .


திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியம், ஸ்ரீரங்கம் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில்
மலேசிய நிறுவன நிதி உதவியுடன் சென்னை டைட்டன், திருச்சி ஹெரிடேஜ் ரோட்டரி சங்கங்கங்களின் முயற்சியால் 300 மாணவர்களுக்கு ரோபாட்டிக்ஸ் பயிற்சி நேற்று  தொடங்கப்பட்டது – ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் ஆண்டாள் ராம்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ஜவகர், ராதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.திருச்சி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி பேபி தொடங்கி வைத்தார் – மலேசியா
இ-சொல்யூசன் நிறுவனர் எழில் வாணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இப்பயிற்சியை தொடர்ந்து முறையாக கற்கும் மாணவர்கள் இளம் தொழில் முனைவோராக உறுதியாக மாறி விடுவர் என்று கூறினர். ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராய் ஜான் தாமஸ், சண்முகம், ஹரிபாபு, ஜான்சன், இராம கிருஷ்ணன் ஆகியோர் உரிய ஏற்பாடுகளை செய்திருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.