திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் தனியார் அரிசி ஆலை முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
லால்குடி அருகே செம்பரை தெற்கு தெருவை சேர்ந்தவர் 52 வயதான ரமேஷ் குமார்.இவர் பூவாளூரில் உள்ள தனியார் அரிசி ஆலை முன்பு தனது ஹீரோ ஸ்ப்ளெண்டர் மோட்டார் பைக் நிறுத்திவிட்டு சொந்த வேலையாக வெளியில் சென்றிருந்தார்.பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக் மாயமாகி இருந்தது் இதனால் அதிர்ச்சி அடைந்தவர் பல்வேறு இடங்களில் மோட்டார் பைக்கை தேடி உள்ளார்.ஆனாலும் மோட்டார் பைக் கிடைக்காததால் லால்குடி காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்