போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
திருச்சி ஆக 11 திருச்சி -புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள இலங்கை மறுவாழ்வு மையம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கேகே நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் போலீசார் அங்குசென்று பார்த்தபோது ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்த பொழுது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது ஜே ஜே நகரை சேர்ந்த ராமன் என்பவர் மகன் வீர மணிகண்டன் என்பதும், இவர்தான் அந்தப் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்துகேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்து 100 போதை மாத்திரைகள் மற்றும் ஊசியை பறிமுதல் செய்துள்ளனர்.