மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் மாயம்
திருச்சி ஆக11- திருச்சி தில்லைநகர் கிழக்குத் தெருவை சேர்ந்தவர்வசந்தி இவரது மகன் சதீஷ்குமார் (வயது 37)இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் வீட்டிலிருந்த சதீஷ்குமார் திடீரென்று மாயமாகி விட்டார். இந்த சம்பவம் குறித்து தில்லை நகர் போலீசில் தாய் வசந்தி புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.