அரசு பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
திருச்சி ஆக 5 – திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பொன்மலை சர்வீஸ் ரோட்டில் நேற்று காலை இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில்பொன்மலை வார சந்தையில் கறி வாங்கிக் கொண்டு பொன்மலை ஜி கார்னர் சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது அவர்களுடைய வாகனத்திற்கு முன்பு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது.இதனைப் பார்த்த அந்த வாலிபர்கள் திடீரென்று முன்னாள் சென்ற லாரியை முந்திக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றனர். அப்பொழுது எதிரே அதே திசையில் வந்த அரசு பஸ் மீது எதிர்பாராதமாக இரு சக்கர வாகனம் மோதியது.இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்தனர்.இந்த விபத்தில் வாகனத்தை ஒட்டி வந்த வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொருவர்பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.இந்த விபத்து சம்பவத்தில் இருசக்கர வாகனம் சுக்கு நூறாக உடைந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து திருச்சி கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த நபர் வாலிபர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்மலை ஜி கார்னர் பகுதி என்பது பொன்மலையையும் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இணைக்கும் பகுதி இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை காரணமாக சர்வீஸ் ரோடு இயங்கி வருகிறது இந்த சர்வீஸ் ரோடு இருபுறம் செல்லும் பாதையாக அமைந்துள்ளது இதன் காரணமாக இவ்விடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது எனவே திருச்சி மாநகர காவல் துறையினர் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.