திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார்( வயது 23). இவர் தனது நண்பர் ஹரி சரவணன் (வயது 20) என்பவருடன் வீ.பூசாரிபட்டி சென்று விட்டு பின்னர் அங்கிருந்து கரும்புளிபட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். வீ.பூசாரிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் வசந்தகுமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சரவணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.