“வாக்காளர் அட்டை”யில் புகைப்படம் இல்லாததால் வாலிபர் அதிர்ச்சி!

0 323
Stalin trichy visit

திருச்சி மன்னார்புரம் செங்குளம்காலனியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவர் தங்கி இருந்த அரசு குடியிருப்பு கடந்த 6 மாதத்துக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதனால் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தார். இதையடுத்து தனது வாக்காளர் அடையாளஅட்டையில் இருப்பிடம், முகவரி மாறுதல் வேண்டி விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர்

அடையாளஅட்டை தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அடையாள அட்டையை அவர் வாங்கி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் அவருடைய புகைப்படம் இல்லாமல் பெயர் மற்றும் வீட்டு முகவரி மட்டும் இருந்தது. ஒருசில நேரங்களில் வாக்காளர் அடையாள அட்டையில் பெயரோ அல்லது முகவரியோ மாறி இருக்கும். ஆனால் இங்கு புகைப்படமே இல்லாமல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.