அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 195
Stalin trichy visit

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது நிலவி வரும் நோய்த்தொற்று அபாயத்தை சமாளிக்க ஒவ்வொரு குடும்பங்களிலும் போதுமான வருமானம் இல்லாததால் அரசாங்கமே முன்வந்து ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 கொரோனா நிவாரண தொகையாக வழங்க முடிவு செய்து உத்தரவிட்டுள்ளார்.அதன்படி முதல் தவணையாக ரூபாய் 2000 வழங்கும் திட்டமானது நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு இந்த திட்டத்தை துவங்கி வைத்தார்.அதன்படி இன்று முதல் திருச்சி மாவட்டத்தில் உள்ள 1226 நியாயவிலைக் கடைகள் மூலம் 8 லட்சத்து 7 ஆயிரத்து 165 குடும்ப அட்டைதாரர்களுக்கு நோய்த்தொற்று நிவாரண உதவித் தொகையான ரூபாய் 2000 முதல் தவணையாக வழங்கப்பட உள்ளது. வழங்கப்பட்டுள்ள வருகிறது. ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைதாரர்கள் வீதம் வழங்கப்படுகிறது. இதற்கென்று திருச்சி மாவட்டத்திற்கு ரூபாய் 161.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை ஆழ்வார்தோப்பு நியாய விலைக்கடையில் நகர்புற வளர்ச்சி அமைச்சர் கே.என்.நேரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் கொரோனா நிவாரண தொகையை வழங்கினார்.

 

Leave A Reply

Your email address will not be published.