திருவெறும்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவெறும்பூர் காவல்நிலைய ஆய்வாளராக இருப்பவர் ரத்தினகுமார். இவருக்கும் மற்றும் காவல் நிலையத்திலுள்ள 6 காவலர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.