காந்திமார்க்கெட்டில் இறுதி கட்ட வியாபாரம் தீவிரம்: கேள்விக்குறியாகும் கொரோனா கட்டுப்பாடுகள்???

0 195
Stalin trichy visit

கொரோனா பரவலலை கட்டுப்படுத்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பிற்பகல் 12 மணிவரை அத்தியாவசிய பொருள்களை வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் போக்குவரத்து மற்றும் மக்கள் நெரிசல்நிறைந்த பகுதி காந்திமார்க்கெட் – கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக சில்லறை வணிகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, மொத்த வியாபாரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களும், வியாபாரகளும் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதில் மெத்தனம் காட்டி வருகின்றனர்.நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்று கூட்டம் கூட்டமாக காந்தி மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள், வியாபாரிகளால் வியாபாரம் களைகட்டியது. ஆனால் கொரோனா விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. திருச்சியில் 300க்குள் இருந்து கொரோனா பாதிப்பு தற்போது 1200 தாண்டி விட்டது. எனவே வியாபாரகளும், பொதுமக்களும் கொரோனா கட்டுப்பாட்டை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென்பதே அரசு மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளனது.

 

Leave A Reply

Your email address will not be published.