இந்து அறநிலையத்துறை இடத்தை மீட்க வேண்டும் – பாஜகவினர் மனு

0 904
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட பாஜகவினர் சார்பாக இந்து அறநிலையத்துறை இடத்தை மீட்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

 

அந்த மனுவில்… “திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மதுரை மெயின் ரோட்டில் உள்ள கார்மல் பிரதர்ஸ் கட்டிடமானது இந்து அறநிலையத்துறை இடத்தில் கட்டப்பட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக திருச்சி டிஆர்ஓவிடம் புகார் கொடுக்கப்பட்டு அதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த இடத்தில் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கார்மல் பிரதர்ஸ் இடமானது நீர்நிலைகளை ஆக்கிரமித்து  கட்டப்பட்டதாகவும், தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் கட்டிட பணிகளை மேற்கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்து சமய அறநிலைத்துறை இடத்தை மீட்க வேண்டும்” என்று கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்

Leave A Reply

Your email address will not be published.