உத்தமர் கோயில் சார்பில் பொதுமக்களுக்கு மதிய உணவும்,கபசுரக் குடிநீரும் வழங்கல்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் உள்ள உத்தமர் கோவிலில் பொது மக்களுக்கு 100 பேருக்கு கபசுரக் குடிநீரும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் 80 பேருக்கு அன்னதானமும் வழங்கினார்.கொரோனா வைரஸ் தொற்றின் 2 ம் அலை நாடு முழுதும் வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுக்பும் பொருட்டு பொதுமக்களுக்கு எதிர்ப்பு சக்தி கூட்டும் வகையில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டிலுள்ள உத்தமர் கோவில் நிர்வாகம் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீரும், வாழ்வாதாரம் பாதித்து உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு மதிய உணவும் தினமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் கோயில் செயல் அலுவலர் ஜெய்கிஷான் மண்ணச்சநல்லூர் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன னதானமும்,கபசுர குடிநீரையும் வழங்கினார்.