ஏழைகளின் பசியை போக்கும் உன்னத பணியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதி மக்கள் பாராட்டு

0 345
Stalin trichy visit

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பலர் வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.கொரோனா தொற்றால் தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாடக்கூடாது.அவர்களது பசிப்பிணியை போக்கும் உன்னத பணியை திமுகவினர் செய்யவேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.வேண்டுகோளுடன் நின்று விடாமல் குடும்பத்திற்கு ரூ. 4,000, 14 வகை மளிகை பொருட்கள் அரசின் சார்பில் இலவசமாக வழங்கினார் முதல்வர்.தன்னுடைய சொந்த பணத்திலிருந்தும் ஏழை எளியவர்களுக்கு அன்றாடம் உதவி வருகிறார்.முதல்வரின் வேண்டுகோளை ஏற்று தனது தொகுதியில் கடந்த 20 நாட்களாக ஏழைகளின் பசியாற்றி வருகிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.இளம் அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வரின் எண்ணங்களை புரிந்துகொண்டு உடனுக்குடன் அவற்றை செயல்படுத்துவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார். வறுமையைப் போல் துன்பமானது வறுமை தான் என்று வள்ளுவர் சொல்லுவார். அந்த வறுமையை கண்டறிந்து அவர்களுக்கு உதவுகிறவர்களுக்கு நிலையான புகழ் சேரும் என்று வள்ளுவர் சொல்கிறார்.வள்ளுவனின் வாக்கிற்கிணங்க பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு தினமும் பசிப்பிணி போக்கும் உன்னத பணியை அமைச்சர் செய்து வருகிறார். தினந்தோறும் காலை தனது அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு சுடச்சுட இட்லி, பொங்கல் உள்ளிட்ட சிற்றுண்டிகளை வழங்குகிறார்.எத்தனை பேர் வந்தாலும் இல்லையென்று சொல்லாமல் அனைவரின் பசிப்பிணியையும் போக்குகிறார்.அரசு அலுவல் காரணமாக சென்னைக்கோ, பிற மாவட்டங்களுக்கோ தான் சென்றுவிட்டாலும் ஏழைகளுக்கு உணவு வழங்கும் பணி தடைப்பட்டு விடக்கூடாது, கொரோனா ஒழிந்து இயல்பு நிலை திரும்பும் வரை இந்த பணி நடைபெற வேண்டுமென்பதற்காக தனது சொந்த பணத்தை பெருமளவு ஒதுக்கி இந்த உன்னதமான பணியை செய்து வருகிறார். தான் வெளியூர் சென்ற நேரத்தில் இந்த பணியை கவனித்து சிறப்பாக செய்ய கட்சி நிர்வாகிகளை நியமித்துள்ளார். அவர்களும் இதனை செம்மையாக நடத்தி வருகிறார்கள்.அமைச்சரின் திட்டத்தால் பசியாறிய ஏழை மக்கள் அமைச்சரை பாராட்டி வருகிறார்கள்.இதுபோல கொரோனா ஒழிப்பு பணியில் முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வருபவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அமைச்சரின் இந்த பணியால் திருவெறும்பூர் பகுதி மக்கள் அவரை மனமார வாழ்த்துகிறார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.